Thursday, October 7, 2010

பாடாண்திணை...

தலைவனின் வெற்றிக்கு
வாகை சூடுவதற்காக
நாங்கள்
பூத்தொம்பைகளோஒடு
புறப்பட்ட போதுதான்
உன்
வேதிக்குண்டுகள்
விழுந்து தொலைத்தன..
தொம்பைகள் மீதும்
வாகையின் கிளைகள் மீதும்!

ஆனால் பாடாண்திணையில்
தலைவனை இருத்திப்
பாட்டெழுத
என்னுள்ளும்
எமக்குள்ளும்
பீறிட்டுக் கிளம்பும்
சொற்களின் மீது
எந்த வேதிக் குண்டுகளை
வீசுவாய் நீ ?

* தொம்பை- பூக்கூடை